அருர் அரசு கலை கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

அரூர், பிப்.26: அரூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், அரூர் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பாலியல் வன்கொடுமை, திராவக வீச்சு, போதை பொருள் தடுப்பு ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட உரிமையியல் நீதிபதி விஸ்வநாதன், குற்றவியல் நடுவர் நீதிபதிகள் தமிழரசி, கோபாலகிருஷ்ணன், சட்டப் பணிகள் குழு நிர்வாக அதிகாரி விஜயகுமார், கல்லூரி முதல்வர் செல்வபாண்டியன் ஆகியோர் பங்கேற்று பெண் உரிமை, பெண்களின் பாதுகாப்பு, வன்கொடுமை சட்டங்கள், போதை பொருள் தடுப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் வழக்கறிஞர்கள் சிற்றரசு, தர்மலிங்கம், ரமேஷ்பாபு, தன்னார்வ சட்ட பணியாளர்கள் அருணகிரி, வீராசாமி, மகேஷ்கண்ணன், இளவரசி, சங்கீதா, கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: