வினாடி வினா போட்டியில் அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக்

பள்ளி மாணவர்கள் சாதனைதர்மபுரி, பிப்.26: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கனரா வங்கி மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி பள்ளிகளுக்கிடையே வினாடி வினா போட்டி நடந்தது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நடந்த போட்டிகளில் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலிருந்து 300 மாணவர்கள், 142 குழுக்களாகப் பங்கு கொண்டனர். இப்போட்டியில் தர்மபுரி அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் நிரஞ்சன் மற்றும் மிதுன் சூர்யா ஆகிய இருவரும் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும், அதிகப்படியான வினாக்களுக்கு விடையளித்து 7ம் வகுப்பு மாணவர்கள், அரவிந்த், ஹரிசங்கர் மற்றும் 8ம் வகுப்பு மாணவன் அகிலன் ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் பரிசு வழங்கினார். செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர் மற்றும் தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் செந்தில்முருகன், பொறுப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: