துணை ஜனாதிபதி இன்று கோவை வருகை

கோவை, பிப்.21: துணை ஜனாதிபதி இன்று கோவை வருகிறார். ஈஷா யோகா மைய விழாவில் பங்கேற்கிறார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் டெல்லியிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை 10.40 மணிக்கு வருகிறார். பின்னர் பீளமேடு தனியார் கல்லூரி விழாவில் 11 மணி முதல் 12 மணி வரை பங்கேற்கிறார். அங்கிருந்து காரில் ஈஷா யோக மையத்திற்கு செல்கிறார். பிற்பகல் 12.45 மணிக்கு மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்து கலை நிகழ்ச்சியை பார்வையிடுகிறார். அங்கிருந்து இரவில் 8.45 மணிக்கு காரில் புறப்பட்டு கோவை சுற்றுலா மாளிகை வந்து தங்குகிறார். பிறகு நாளை காலை 8.40 மணிக்கு கோவை விமான நிலையம் சென்று விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இவருடைய வருகையையொட்டி குண்டு துளைக்காத கார் மற்றும் ஜாமர் பொருத்திய கார்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் கோவையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: