விஏஓ முன்னேற்ற சங்க நிர்வாக குழு கூட்டம்

தர்மபுரி, பிப்.19: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க நிர்வாக குழு கூட்டம் தர்மபுரியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சாம்ராஜ் வரவேற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பூபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில், வருவாய்த்துறை பணியில் முழு புலம் பட்டா மாறுதல் பணியை, பத்திர பதிவுத்துறைக்கு மாற்றம் செய்த அரசாணையை ரத்து செய்து, மீண்டும் வருவாய் துறைக்கே வழங்க வேண்டும். இ-அடங்கலில் உள்ள குறைபாடுகளை களைந்து இ- பிரிண்ட் அவுட் எடுக்கும் வசதியை விஏஓவுக்கு வழங்க வேண்டும். விஏஓக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பணி சுமையை குறைக்கும் வகையில், வருவாய் கிராமங்களை நிர்வாக வசதிக்காக விரிவாக்கம் செய்து, புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் தீர்த்தகிரி, தாமோதரன், அகிலன் அமிர்தராஜ், ரவி, வெங்கடேசன், சரவணன் மற்றும் தர்மபுரி வட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: