சஜ்ஜலஅள்ளியில் சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

பாப்பாரப்பட்டி, பிப்.19: பாப்பாரப்பட்டியை அடுத்த சஜ்ஜலஅள்ளியில் பழுதடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாப்பாரப்பட்டியை அடுத்த சஜ்ஜலஅள்ளி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில், தனிநபர் கழிப்பிட வசதி இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, அப்பகுதியில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2011-2012ம் ஆண்டு ₹1.71லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்காததால், தண்ணீர் வசதியின்றி மூடப்பட்டது. இந்த கட்டிடத்தின் சுவர்கள் அனைத்தும், இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், இரும்பு கதவுகள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: