கொடிசியா சார்பில் தேசிய அளவிலான கட்டுமானம், நீர் மறுசுழற்சி தொழில்நுட்ப கண்காட்சி

கோவை,பிப்.19: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் கட்டுமான தொழில்நுட்பம் மற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்ப கண்காட்சி கோவையில் நடத்தப்படுகிறது. கொடிசியா அரங்கில் வரும் வரும் 21ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியை கோவை மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி. ஜெகதீசன் துவக்கி வைக்கிறார். இதில் ராம்கோ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தர்மகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதுகுறித்து கொடிசியா தலைவர் ராமமூர்த்தி மற்றும் பில்ட் இன்டெக் 2020 மற்றும் வாட்டர் இன்டெக் 2020 தலைவர் ராம்மோகன் ஆகியோர் கூறியதாவது:- இந்த கண்காட்சியில் கட்டிட பொருட்கள், எம் சாண்ட் மற்றும் உபகரணங்கள், கட்டிட தொழில்நுட்பம், கட்டுமான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், அதன் உட்பிரிவுகள், சோலார் பேனல்கள், இன்வெட்டர்கள், மின் அமைப்புகள், ஜெனரேட்டர்கள், எல்.இ.டி லைட்டிங், ஏர் கண்டிஷனர்கள், வாட்டர் ஹீட்டர்கள், குளிர்சாதன தொழில்நுட்பம், நீச்சல் குள தொழில்நுட்பம், குளியலறை உபகரணங்கள், நீர் மறுசுழற்சி மற்றும் நீர் மேலாண்மை குறித்த புதிய தொழில் நுட்பங்கள், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள், அறைகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. தமிழகம், குஜராத், ஆந்திர பிரதேசம், டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, கேரளா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300 காட்சியாளர்கள் பங்கேற்று 1 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரங்கங்களை அமைக்க உள்ளனர். கண்காட்சியை காண நாடு முழுவதும் இருந்து சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த கட்டுமான தொழில்நுட்ப கண்காட்சியில் ரூ.125 கோடி அளவிற்கு வர்த்தகம் நடந்தது. இந்தாண்டு ரூ.200 கோடி அளவிற்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: