அரூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

அரூர், பிப்.13:  அரூர் அருகே கொங்கவேம்பு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிழற்கூடம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அரூர்-ஊத்தங்கரை சாலையில் கொங்கவேம்புவில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள கூத்தாடிப்பட்டி, கொங்கவேம்பு, வேட்ரப்பட்டி, எஸ்.பட்டி, கருப்பிலிப்பட்டி, பழைய கொங்கம் உள்ளிட்ட கிராமபுற பகுதிகளிலிருந்து தினந்தோறும், 200க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். அவ்வாறு சிகிச்சைக்கு வருபவர்கள் பஸ்சிற்காக காத்திருக்கும் நேரங்களில் மரத்தடியில் காத்திருக்க நேரிடுகிறது. இந்த வழியாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே நகர பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமர்வதற்கு கூட இடம் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: