சித்தேரியில் இருந்து சூரியகடைக்கு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

அரூர், பிப்.11: அரூர் அருகே சித்தேரியில் இருந்து சூரியகடைக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அரூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் சித்தேரி மலை ஊராட்சி உள்ளது. இங்கு 60 குக்கிராமங்கள் அமைந்துள்ளது. அடிப்படை தேவைகள், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்லும் கிராம மக்கள், அரூருக்கு தினந்தோறும் வரவேண்டி உள்ளது. இங்கு வந்து செல்ல ஒரு தனியார் பஸ்சும், 2 அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நகர பஸ்கள் இரண்டும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளி விட்டு செல்லும் நேரங்களில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிகளில் தொங்கிய படி பயணம் செய்ய நிலை ஏற்படுகிறது. சித்தேரிக்கு இயக்கப்படும் 13 எண் கொண்ட பஸ், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சித்தேரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சூரியகடைக்கு செல்வதில்லை. சித்தேரி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் சூரியகடை, பேரேரிபுதூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் மக்கள், தங்களது பொருட்களை தலைச்சுமையாக நடந்தே எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அனைத்து நாட்களிலும் பஸ்களை சூரியகடை வரை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: