இன்று தை அமாவாசை திருமூர்த்தி மலையில் பாதுகாப்பு ஏற்பாடு

உடுமலை, ஜன.24: இன்று தை அமாவாசையையொட்டி திருமூர்த்தி மலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தினர். ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று, திருமூர்த்தி மலைக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வருவார்கள். திருமூர்த்தி அணையின் கரையோரம் வண்டிகளை நிறுத்தி, இரவு முழுவதும் அங்கேயே தங்கி அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு தை அமாவாசை இன்று (24-ம் தேதி) இரவு நடக்கிறது. இதையொட்டி, முதன்முறையாக போலீசார் பாதுகாப்பு ஆலோசனை நடத்தி உள்ளனர். உடுமலை டி.எஸ்பி. ஜெயச்சந்திரன், தளி இன்ஸ்பெக்டர் பார்வதி மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். மாட்டு வண்டிகளை நிறுத்துமிடம், மற்ற வாகனங்களை நிறுத்துமிடம், போக்குவரத்து நெரிசல் குறைப்பது குறித்து ஆலோசித்தனர். தீயணைப்பு வண்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: