26ல் கிராம சபை கூட்டம்

கோவை, ஜன. 24:கோவை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று காலை 11.00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளதாவது:கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் ஊராட்சிப் பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் சக்தி அபியான், பிரதம மந்திரி கிராம  சாலைகள் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் நடக்கும் கிராம  சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

Advertising
Advertising

Related Stories: