தர்மபுரி, ஜன.23: தர்மபுரியில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடிகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், மத்திய அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி கொண்டாடப்படுவது வழக்கம். இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தர்மபுரி நகரில் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தர்மபுரி நகரில் உள்ள காதி விற்பனை மையங்களில் கதர் தேசிய கொடி விற்பனைக்கு வைக்கப்பட்டு, ₹50 முதல் ₹300 வரை விற்பனை செய்யப்படுகிறது.