குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம்

தர்மபுரி, ஜன.21: தர்மபுரி அரசு கல்லூரியில் தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கையெழுத்திட்டனர். தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, தர்மபுரி மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில், அரசு கலைக்கல்லூரி முன் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாணவர் சங்க துணைத்தலைவர் தமிழமுதன் தலைமை வகித்து, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதுபற்றி மாணவர்கள் கூறுகையில், ‘இந்தியா மதச்சார்பற்ற நாடாகும். எனவே, மதம் சார்ந்த குடியுரிமை என்பதை ஏற்க முடியாது. தற்போது வரும் சட்டத்தில் தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் அகதிகள் முகாம்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இவற்றை தடுக்க தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்,’ என்றனர்.

Related Stories: