பென்னாகரம் அருகே வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து பஞ்.தலைவராக வெற்றி

தர்மபுரி, ஜன.10: பென்னாகரம் அருகே வாக்காளர்பட்டியலில் முறைகேடு செய்து, ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற பெண் மீது, தோல்வி அடைந்த பெண் வேட்பாளர், கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.பென்னாகரம் வட்டம், பெரும்பாலை ஊராட்சி ஆலமரத்தூர் கிராமத்தை சேர்ந்த தனபால் மனைவி மல்லிகா(52). வேட்பாளரான இவர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பென்னாகரம் அருகே பெரும்பாலை ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இந்த 12 வார்டிலும் 6,482 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 30ம் தேதி ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் நடந்தது. நான் உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டோம். எங்களுக்கு எதிராக கஸ்தூரி போட்டியிட்டார். அவர் 1325 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற இவருக்கு பெரும்பாலையிலும், சேலம் மாவட்டம் மேச்சேரியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. கஸ்தூரி தனது பெயரை முறைகேடாக பதிவு செய்து, போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது தலைவர் பதவி செல்லாது என அறிவித்து, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: