அரூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்

அரூர், ஜன.8: அரூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அரூர் சுற்றுவட்டார பகுதிகளான மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிரை சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஓரளவு கை கொடுத்ததால், அரூர் சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பாமல், பாதி அளவே நிரம்பியுள்ளன. எனவே விவசாயிகள் ஆறுமாத கால பயிர்களான பொன்னி, பி.பி.டி,  ஆந்திரா, கேரளா உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிடாமல் ஏ.டி.டீ 37, ௧ோ 51 போன்ற குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயாராகும், நெற்பயிர் ரகங்களை நடவு செய்துள்ளனர். தற்போது சாகுபடி செய்த, நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. எனவே அரூர் சுற்றுவட்டார பகுதியில், நெல்  அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: