கோட்டை பெருமாள் கோயிலில் துவாதசி விருந்து

தர்மபுரி, ஜன.8: துவாதசியை முன்னிட்டு தர்மபுரி கோட்டை பெருமாள் கோயிலில் ஆயிரக்கணக்கானோருக்கு துவாதசி விருந்து அளிக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை அடுத்த நாளான துவாதசியை முன்னிட்டு, தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோயிலில் நேற்று துவாதசி விருந்து நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு பரவாசுதேவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. பகல் 12 மணியளவில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு துவாதசி விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி கமிஷனர் பிரகாஷ், செயல் அலுவலர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர். தர்மபுரி மண்டபத்தெருவில் உள்ள கல் மண்டபத்தில், ஸ்ரீ ராதாருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால் உற்சவர்களுக்கு நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இதையடுத்து கல் மண்டபத்தில் துவாதசி விருந்து நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று விருந்து சாப்பிட்டனர். இதேபோல் சொர்க்க வாசல் திறக்கப்பட்ட, பல்வேறு பெருமாள் கோயில்களில் துவாதசி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: