நார்த்தம்பட்டியில் நெல்விளைச்சல் அமோகம்

தர்மபுரி, டிச. 29: தர்மபுரி அருகே நார்த்தம்பட்டியில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டதில் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மழையின்றி ஏற்பட்ட வறட்சியால் நெல் சாகுபடி முற்றிலும் பாதித்தது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இதனால் புரட்டாசி பட்டத்தில், நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியில் சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது நெற்பயிரில் கதிர்கள் முளைக்க தொடங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் நெல் சாகுபடி அமோகமாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: