நெல்லை, டிச.16: வீரவநல்லூர் அருகேயுள்ள புதூரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி திரவியக்கனி(80). இவர்களுக்கு அண்ணாத்துரை உள்பட 4 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கணவர் இறந்துவிட்டதால் திரவியக்கனி தனியாக வசித்து வந்தார். நேற்று காலை மகன் அண்ணாத்துரை, வேலைக்கு செல்லும்போது தாயை பார்க்க வீட்டுக்கு சென்றபோது பூட்டி இருந்தது. இதனால் அவர் வெளியில் சென்றிருக்கலாம் என கருதிய அவர் வேலைக்கு சென்றுவிட்டார். மதியம் திரும்பி வந்தபோதும் வீடு திறக்காததால் சகோதரி வீட்டில் தேடியபோதும் அங்கில்லை.
