தென்காசி,ஜன.6:தென்காசியில் ஹிந்த் மஸ்தூர் சபா, தமிழ்நாடு ஹிந்த் மஸ்தூர் சபா கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் போனஸ் ரூ.7000 வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தியான கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். உழைப்பாளிகளின் உரிமைகள் பறிக்கின்ற வகையில் ஒன்றிய அரசின் 44 தொழிலாளர் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து பேரவை தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, பேரவை பொதுச் செயலாளர் கணேசன், மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தென்காசி
- ஹிந்த் மஸ்தூர் சபா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஹிந்த் மஸ்தூர் சபா கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் கவுன்சில்
