ம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

சதென்காசி,ஜன.6: தென்காசியில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் இன்னும் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தை பெற்று வருகின்றனர். எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி நேற்று தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் 25க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இடைநிலை ஆசிரியர்களின் இந்த திடீர் போராட்டத்தால் முதன்மை கல்வி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: