வள்ளியூர், ஜன.10: வள்ளியூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி நேற்று வள்ளியூர் கோட்டையடி பகுதியில் நடைபெற்றது. இதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். முன்னாள் எம்பி ஞானதிரவியம், நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், துணை செயலாளர் நம்பி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெசுதேஷ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பெல்சி, நகர செயவாளர்கள் சேதுராமலிங்கம், தமிழ்வாணன், ஐடி அணி அமைப்பாளர் சரவணன், நிர்வாகிகள் லெட்சுமணன், மந்திரம், விஜயன், ஆசியூர் ராமசாமி, முத்துக்குமார், கோபி கோபாலாகண்ணன், ஆதிபரமேஷ்வரன், சிவா, தில்லை, வைகுண்ட ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டி ஆண்களுக்கு 9 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் மாரிசாத் முதலிடமும், நிதிஷ்குமார் இரண்டாமிடமும், நிகில் குமார் மூன்றாமிடமும், பெண்கள் பிரிவில் கோமதி முதலிடமும், நிவேதா இரண்டாமிடமும், முத்ராவும் மூன்றாமிடமும் பிடித்தனர். ஏற்பாடுகளை வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அலெக்ஸ் அப்பாவு செய்திருந்தார்.
வள்ளியூரில் திராவிட பொங்கல் திருவிழா மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
- திராவித பொங்கல் விழா மராத்தான்
- வல்லியூர்
- வல்லியூர் கோட்டை
- திராவிட பொங்கல் திருவிழா
- திமுகா
- வல்லியூர் வடக்கு
- தெற்கு
- ஞானாதிரவியம்
- நெல்லா கிழக்கு
