தென்காசி,ஜன.7: தென்காசி மாதாங்கோயில் 1 வது தெரு நாயுடு சமுதாயத்தை சேர்ந்த பஜனை மடத்தில் மார்கழி மாத பஜனையில் ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன், தென்காசி நகர செயலாளர் சுடலை முன்னிலையில் வேட்டி துண்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நாயுடு சமுதாய தலைவர் ஜெயராமன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குணம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உச்சிமாகாளி என்ற துப்பாக்கிபாண்டியன், முருகன் ராஜ், பூக்கடை சரவணன், ஸ்டீல் மாரியப்பன், பட்டுப்பூச்சி பீர் முஹம்மது, நகர அவைத்தலைவர் முத்துக்குமாரசுவாமி, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் வெள்ளப்பாண்டி, சுரேஷ், சுடலை, ராமசந்திரன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை 25 வது வார்டு செயலாளர் சந்திரசேகர் செய்திருந்தார்.
