திசையன்விளை, ஜன. 6: தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி சென்னை அம்பத்தூரில் உள்ள பீட்டர்ஸ் பல்கலைக்கழக மைதானத்தில் நடந்தது. இதில் திசையன்விளை வி.எஸ்.ஆர் .இண்டர்நேஷனல் பள்ளி சார்பில் பங்கேற்ற மாணவி ஷிவானி பாலா, மகளிருக்கான 37 முதல் 40 கிலோ எடை பிரிவில் கம்புச்சண்டைப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.சாதனை படைத்த மாணவியை பள்ளித்தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத், ஒருங்கிணைப்பாளர் மரிய ரூபா மற்றும் அனைத்து ஆசிரியர்கள்- அலுவலர்கள் பாராட்டினர்.
மாநில சிலம்பாட்ட போட்டி திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி மாணவி முதலிடம் வென்று சாதனை
- மாநில சிலம்பாட்டப் போட்டி
- வெட்டியான்விளை விஎஸ்ஆர் சர்வதேச பள்ளி
- வெட்டியான்விளை
- சிலம்பட்டா
- தமிழ்நாடு சிலம்பாட்ட சங்கம்
- பீட்டர்ஸ் பல்கலைக்கழக மைதானம்
- அம்பத்தூர், சென்னை
- ஷிவானி பாலா
