நெல்லை, ஜன. 7: மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைைப் பள்ளியில் 231 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும் நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் வழங்கினார். மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் 231 விலையில்லா மிதிவண்டியை 11ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும் நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேருந்து நிலையம் வரை நடைபயணம் நடந்தது. நிகழ்வில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மூலைக்கரைப்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன், மூலைக்கரைபட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி மோகன், கவுன்சிலர் மரியசாந்தி, நாங்குநேரி வடக்கு வட்டாரத் தலைவர் அம்புரோஸ், பாளை தெற்கு வட்டாரத் தலைவர் நளன், காங்கிரஸ் நிர்வாகிகள் பிலியன்ஸ், சிங்கராஜா, மைக்கேல் செந்தூரியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளியில் 231 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
- மூகரக்ரைப்பட்டி அரசு பள்ளி
- நெல்லை
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- அரசுப் பொருளாளர்
- நாங்குநேரி
- சட்டமன்ற உறுப்பினர்
- ரூபி மனோகரன்
- மூகரக்ரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி
- தமிழ்நாடு அரசு
