நலத்திட்டங்களுக்கு பொது நிதியை விடுவிக்க கோரி அணுமின் நிலைய இயக்குநரிடம் யூனியன் சேர்மன் மனு

பணகுடி, ஜன. 7: மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த பொது நிதியை விடுவிக்க வேண்டும் என கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் ஆபிரகாம் ஜேக்கப்பிடம் வள்ளியூர் யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான ராஜா ஞானதிரவியம் நேரில் சந்தித்து மனு அளித்து கோரிக்கை விடுத்தார்.நிகழ்வில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதிராமன், சாந்திகலா, வள்ளியூர் ஒன்றிய துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், கவுன்சிலர்கள் ரைகானா ஜாவித், பொன்குமார், தாய்செல்வி, இளங்கோவன், கோசிஜின், ஜெயா, மகாலட்சுமி, மல்லிகா அருள், பாண்டித்துரை, சாரதா, ஜெயலெட்சுமி, அனிதா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: