சங்கரன்கோவில் நகராட்சி 1வது வார்டில் ரூ.20 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

சங்கரன்கோவில்,ஜன.3: சங்கரன்கோவில் நகராட்சி 1வது வார்டு ஐவராஜா நகர் பகுதியில் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் நகராட்சி சேர்மன் கவுசல்யா தலைமை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் ஆல்பர்ட், கவுன்சிலர்கள் புஷ்பம், செல்வராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், வெங்கடேஷ், சிவசுப்பிரமணியன், வார்டு செயலாளர் தங்கவேல், பாக முகவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: