பென்னாகரம் அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

பாப்பாரப்பட்டி, டிச.13: பென்னாகரம் அருகே வத்திமரதஹள்ளி கிராமத்திற்கு செல்லும் வழியில் பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலை பணியால், மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பென்னாகரம் வட்டம், பனைகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட வத்திமரதஹள்ளி கிராமத்திற்கு  செல்லும் பிரதான சாலையை, சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலம், சிலர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் ேபரில், பழைய சாலையை பெயர்த்து விட்டு புதிய சாலை அமைப்பதற்காக, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கப்படாமல் கடந்த ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தார்சாலை பணியை விரைவுபடுத்த ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: