மாவட்ட அளவிலான செயல் திட்ட அறிக்கை சமர்ப்பித்தல் போட்டி

தர்மபுரி, நவ.29:தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில், அரசு பள்ளிகளில் பிளஸ்1 பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ஸ்கோப் எனும் மாவட்ட அளவிலான செயல்திட்டங்கள் அறிக்கை சமர்ப்பித்தல் போட்டி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கவேலு போட்டிகளை தொடங்கி வைத்தார். ஏற்கனவே, ஒன்றிய அளவிலான அறிக்கை சமர்ப்பித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், இதில் பங்கேற்றனர். இதில், 7 பாட பிரிவுகளில் 5 பேர் வீதம், தேர்வு பெற்ற 35 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மாவட்ட அளவில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். போட்டிகளில் பங்கேற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள் பொன்முடி, பாலசுப்ரமணி, தலைமையாசிரியர்கள் ராஜாஅண்ணாமலை, பாபுசுந்தரம், ஜான்பிலிக்ஸ், வையாபுரி, சம்பத்குமார் மற்றும் அரசு கல்லூரி பேராசிரியர்கள், நடுவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: