ஒடசல்பட்டி கூட்ரோட்டில் போக்குவரத்து சிக்னலை சீரமைக்க வலியுறுத்தல்

அரூர், நவ.28: மொரப்பூர் அருகே ஒடசல்பட்டி கூட்ரோட்டில் போக்குவரத்து சிக்னலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். மொரப்பூர் அருகே ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளது. நான்கு ரோடுகள் சந்திக்கும் இந்த வழியாக, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, ஊத்தங்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் போக்குவரத்து சிக்னல்கள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் சிக்னல்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர போக்குவரத்து அதிகாரிகள் விரைவில்

நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: