வேப்பிலைப்பட்டியில் தரமற்ற சாக்கடை பணியை கலெக்டர் ேநரில் ஆய்வு

கடத்தூர், நவ.20: கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டியில் தரமற்ற முறையில் சாக்கடை கால்வாய் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக எழுந்த புகாரின் ேபரில் நேரில் ஆய்வு செய்த கலெக்டர் அதிகாரிகளை டோஸ் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி கிராமத்தில் சுமார் ₹7 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறங்களிலும் சாக்கடை கால்வாய் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு பணிகள் நடந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மலர்விழியிடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், கலெக்டர் மலர்விழி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது தரமற்ற சாக்கடை கால்வாய் கட்டுமான பணிகள் நடந்து வருவது தெரிய வந்தது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது, கட்டுமான பணிகள் தரமான முறையில் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய மாட்டீர்களா என கேட்டு கண்டித்தார். கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என தெரிய ேவண்டும். மறு உத்தரவு வரும் வரை கட்டுமான பணிகளுக்கான பில் வழங்க கூடாது என உத்தரவிட்டார். மேலும், தரமான கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி கூறினார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் சாக்கடை கால்வாய் பணி தொடங்கியதில் இருந்தே, அதிகாரிகள் யாரும் வந்து எட்டிக்கூட பார்ப்பதில்லை. இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், தனி நபர் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றனர்.

Related Stories: