கடத்தூர் அருகே பழுதான தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

கடத்தூர், நவ.14:  கடத்தூர் அருகே சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அருகே கந்தகவுண்டனூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் வாரத்திற்கு 3 நாட்களுக்கு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியின் அடிப்பகுதி முழுவதும் விரிசல் ஏற்பட்டு, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், இந்த தொட்டி உடைந்து விழும் நிலையில் உள்ளது. எப்போது ேவண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ள இந்த தொட்டியை உடனடியாக அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: