மகாத்மா காந்தி சாலையில் பாதாள சாக்கடை குழியை சுற்றி தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், நவ. 12: பாதாள சாக்கடை குழி சிமெண்ட் பூச்சு செய்யப்பட்டஇடத்தில் தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.கரூர் மகாத்மாகாந்தி சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக மேன்ஹோல் மூடியை திறந்து பணியாளர்கள் வேலை செய்தனர். பின்னர் சிமெண்ட் பூசி மூடியை மூடிவைத்துள்ளனர். சிமெண்ட் பூச்சு காய்வதற்காக சுற்றிலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனினும் இவற்றை சுற்றி தடுப்புகளை வைக்கவில்லை. சிறிய அளவிலான போர்டு மட்டும் ஒரு இடத்தில் வைத்துள்ளனர். இந்த சாலையில் 3 இடங்களில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் இருசக்கரவாகனங்கள் மற்றும் நான்குசக்கர வாகனங்களில் வருவோர் தடுப்பு வைக்கப்படாதால் தடுமாற்றம் அடைகின்றனர். ஒளி உமிழும் வகையிலான இரும்பு தடுப்புவேலிகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் எந்த பணி செய்தாலும் இந்த துறையின் சார்பாக நடைபெறுகிறது என்ற பலகையை முன்பெல்லாம் வைப்பது வழக்கம்.அதில் ஏற்படும் குறைகள் இடைபாடுகளை அவர்களுக்கு தெரியப்படுத்த முடிந்தது.. தற்போது எந்த துறை இந்த வேலையை செய்கின்றனர் என்றே தெரியாத ஒருநிலை இருப்பதால் குழப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: