மாரண்டஅள்ளி பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு பணி ஆய்வு

பாலக்கோடு, நவ.1: மாரண்டஅள்ளியில் டெங்கு ஒழிப்பு பணி நடந்தது. இதில், கொசு புழு உற்பத்திக்கு காரணமான கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஓசூரை சேர்ந்த இளநிலை பூச்சியியல் வல்லுநர் கோவிந்தன் தலைமையில், மாரண்டஅள்ளி 15 வார்டுகளிலும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வீடுகளில், டெங்கு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது கடைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதும், சுகாதாரமற்று இருப்பதும் ண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்தனர். கொசு புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த, கடைகளுக்கு, 3ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த ஆய்வில், சுகாதார மேற்பார்வையாளர் சுந்தர், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆறுமுகம், இளநிலை உதவியாளர் சம்பத் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: