பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் சாரண, சாரணியர் சங்க பயிற்சி முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.25: அரூர் பாரத சாரண, சாரணியர் சங்க பயிற்சி முகாம்,  பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 நாட்கள் நடந்தது. தொடக்க விழாவுக்கு தர்மபுரி மாவட்ட செயலர் மற்றும் வெங்கட்டேசன் தலைமை தாங்கினார். மாவட்ட சாரணிய ஆணையர் கற்பகம், சாரண ஆணையர் செம்முனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் அப்துல்அஜீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் முகாம் தலைவர் தனபாலன், தர்மபுரி மாவட்ட பொருளாளர் நாகராஜன், பயிற்சி ஆணையர் பாலசுந்தரம், அமைப்பு ஆணையர் கணேசன், அரூர் கல்வி மாவட்ட பயிற்சி ஆணையர்கள் ஆறுமுகம், காந்திமதி, அமைப்பு ஆணையர்கள் கலையரசன், ராணி, தலைமையக ஆணையர் வசந்தா, துணைச்செயலர்கள் இனியவன், பாரதி, அன்பரசி  மற்றும் 29 பள்ளிகளை சார்ந்த சாரண ஆசிரியர்கள் மற்றும் 300 சாரண, மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மாநில ஆளுநர் விருது பெற தேவையான அனைத்து வகையான பயிற்சிகளும், மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது

Related Stories: