பென்னாகரம் ஒன்றியத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

பென்னாகரம், அக்.18: பென்னாகரம் ஒன்றியத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மனித வள மேம்பாட்டிற்கான நிஷ்தா பயிற்சி அளிக்கப்பட்டது. பென்னாகரம் ஒன்றியத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு நிஷ்தா பயிற்சி முகாம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 14ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இப்பயிற்சியில் பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்டு பாடம் நடத்துவது கல்வியின் தரத்தை உயர்த்துதல், தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு வளர்த்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன் பார்வையிட்டுபயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். பயிற்சியானது அனைத்து ஆசிரியர்களுக்கும் 5 நாட்கள் வீதம் நடைபெறும். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன் செய்திருந்தார்.

Related Stories: