பருப்பு, பாமாயில் சப்ளை குறைப்பு

கோவை, அக்.17: கோவை மாவட்டத்தில் 1,403 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு மாவட்ட அளவில் 6 நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்ட அளவில் 10,00,756 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 12 ஆயிரம் டன் அரிசி தேவையாக இருக்கிறது. கோதுமை 650 டன், சர்க்கரை 650 டன், துவரம் பருப்பு 600 டன் தேவையாக உள்ளது. ஆனால் மாத தேவைக்கு 40 சதவீதம் குறைவாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் முதல் வாரத்திலேயே விற்று தீர்ந்து விடுகிறது. சில கடைகளில் அரிசி மட்டும் இருப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. பருப்பு, சர்க்கரை, பாமாயில் கேட்டு பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வது வாடிக்கையாகி விட்டது.

Advertising
Advertising

பொதுமக்கள் கூறுகையில், ‘‘ ரேஷன் கடைகளில் முதல் வாரத்தில் சிலருக்கு மட்டும் பருப்பு, பாமாயில், சர்க்கரை வழங்குகிறார்கள். ஒரு மாதம் பொருட்கள் வாங்கினால் அடுத்த மாதம் பொருட்கள் வழங்க கடை ஊழியர்கள் மறுக்கிறார்கள். கடைகளில் ஆய்வு நடத்த வழங்கல் பிரிவினர், வருவாய்பிரிவினர் முன் வருவதில்லை. ரேஷன் கடைகளில் உள்ள புகார் தொலைபேசி எண்ணில் புகார் கூறினால் யாரும் கண்டுகொள்வதில்லை, ’’ என்றனர்.

Related Stories: