இலக்கியம்பட்டி ஏரியில் படர்ந்த ஆகாய தாமரை

தர்மபுரி, அக்.10: இலக்கியம்பட்டி ஏரியில் அதிகளவில் ஆகாய தாமரை படர்ந்து வருவதால், ஏரியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலக்கியம்பட்டியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இலக்கியம்பட்டி ஏரி, இலக்கியம்பட்டி, செந்தில்நகர் பகுதியில் ஆழ்துளை கிணறுகளுக்கு நீர்பிடிப்பு ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் இருக்கும் வரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். ஏரியில் தண்ணீர் இல்லாவிட்டால், கிணறுகள் மற்றும் போர்வெல்களில் ஒரு மாதத்தில் தண்ணீர் வறண்டு விடும். தற்போது இந்த ஏரியில் ஆகாய தாமரை செடிகள் அதிகளவில் காணப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இலக்கியம்பட்டி ஏரியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி, படகு சவாரி விடப்பட்டது. பின்னர், ஏரியை கண்டுகொள்ளாமல் விட்டதால், தற்போது ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதோடு, தண்ணீரும் மாசடைந்துள்ளது. இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இந்த ஏரியை உடனடியாக தூர்வார, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: