விதிகளை மீறி சரள்மண் எடுப்பதை தடுக்கக்கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை

கோவில்பட்டி, அக்.2 கோவில்பட்டி, கயத்தாறு தாலுகா கிராம குளங்களில் விதிகளை மீறி சரள் மண் எடுப்பதை நிறுத்தகோரி காங்கிரசார் காதுகளில் பஞ்சுகளை வைத்து அடைத்து ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் முதல் கோவில்பட்டி வரை நடைபெறும் ரயில்வே இருப்புபாதை பணிக்காக கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் தாலுகா கிராமங்களில் உள்ள குளங்களில் விதிமுறைகளை மீறி சரள் மண் எடுத்து செல்வதாகவும், தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சரள் மண் அள்ள தடை விதித்துள்ள நிலையில், கோவில்பட்டி, கயத்தாறு தாலுகாவில் சரள்மண் ரயில்வே பணிகளுக்கு குளங்களில் இருந்து கொண்டு செல்வதை தடுக்கவும், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தாறு தாலுகாவில் சரள்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

நீதிமன்ற தடை உத்தரவு உள்ள நிலையில் சரள்மண் கடத்தலை தடுத்து நிறுத்தகோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் தங்களது காதுகளில் பஞ்சுகளை வைத்து அடைத்து நூதன போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட பொதுசெயலாளர் முத்து, மாவட்ட செயலாளர் சுந்தரராஜ், நகர தலைவர் சண்முகராஜ், ஒன்றிய தலைவர்கள் கோவில்பட்டி ரமேஷ்மூர்த்தி, கயத்தாறு செல்லத்துரைஉட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: