மொரப்பூர் வனச்சரகத்தில் மான் வேட்டையாடிய மேலும் 2 பேர் கைது

அரூர், செப்.30: மொரப்பூர் வனச்சரகத்தில் மான் ேவட்டையாடி வழக்கில் ேமலும் 2பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.மொரப்பூர் வனச்சரகம் பில்பருத்தி காப்புகாட்டில், கடந்த மார்ச் 30ம் தேதி, ஏற்காடு பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்கிற மகேந்திரன்(36), லோகநாதன், பாலகிருஷ்ணன், பொன்னாட்சி என்கிற சுரேஷ் ஆகியோர் புள்ளிமானை வேட்டையாடி, வாசிகவுண்டனூர் அருகே பச்சையம்மன் கோயில் அருகில் வந்த போது, வனத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது லட்சுமணன் மட்டும் பிடிபட்டார். மற்ற 3 பேர் தப்பியோடி விட்டனர். அதில் பாலகிருஷ்ணன் என்பவர் பிடிபட்டார்.

மேலும் இருவரை பிடிக்க மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையில் கோவிந்தராஜ், வேடியப்பன், வசந்தராஜ், முனியப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தேடப்பட்டு வந்த லோகநாதன்(59), பி.துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாது(59) ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து 2 பேரையும் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: