சூலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

சூலூர், செப்.20: சூலூர் அருகே உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அதே பகுதியைச் சேர்ந்த மிதுன்(22) என்ற வாலிபர் பழகி வந்தார். இந்நிலையில் அந்த மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் மிதுனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: