வேலை நிறுத்தம் குறித்து சத்துணவு ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, செப்.20: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான வேலை நிறுத்த ஆயத்த விளக்க கூட்டம், தர்மபுரி சிஐடியூ அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பாபு வரவேற்றார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் காவேரி, மாவட்ட நிர்வாகிகள் வளர்மதி, மகேஸ்வரி, அனுசுயா, தேவேந்திரன், சுகுமார், கணேசன், வளர்மதி, லூசாமேரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லில்லிபுஷ்பம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.கூட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ₹9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 16ம்தேதி மாவட்ட அளவில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படுகிறது. அக்டோபர் 23ம்தேதி, மாநிலம் முழுவதும் ஒன்றிய அளவில் பிரசாரம் நடத்துவது, நவம்பர் 12ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர கோரிக்கை கவன ஈர்ப்பு பேரணி, நவம்பர் 26ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், டிசம்பர் 23ம் தேதி முதல் மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் தேவகி நன்றி கூறினார்.

Related Stories: