தொட்டம்பட்டியில் ரயில்வே சுரங்க பாலத்தில் குளம்போல் தேங்கும் மழைநீர்

அரூர்,செப்.19: மொரப்பூர் அருகே தொட்டம்பட்டி ரயில்வே சுரங்க பாலத்தின் அடியில், குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தொட்டம்பட்டி ரயில்வே சுரங்கப்பாலத்தின் வழியாக மொரப்பூர், மருதிப்பட்டி, கல்லடிப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். டூவீலர், கார், மினிடேர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இந்த சுரங்க பாலத்தின் வழியாக சென்று வந்தன.இந்த ரயில்வே சுரங்க பாலத்தில் சிறிய மழை பெய்தாலே, பாலத்தின் அடியில் குளம் போல் தண்ணீர் தேங்கிவிடும். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பாலத்தின் அடியில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மழைக்காலங்களில் சுரங்க பலத்தின் அடியில் தண்ணீர் தேங்காதவாறு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: