கோவையில் பெரியார் 141 வது பிறந்த நாள் விழா

கோவை, செப். 17:  கோவையில் இன்று பெரியார் 141வது பிறந்த நாள் விழா நடக்கிறது.  கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், தந்தை பெரியார் 141-வது  பிறந்தநாள் விழா கோவையில் இன்று நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை 9 மணிக்கு காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை  செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. எனவே, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக   நிர்வாகிகள், தலைமை  செயற்குழு உறுப்பினர்,  பொதுக்குழு உறுப்பினர்கள்,  பகுதி  செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின்  அமைப்பாளர்கள், துணை  அமைப்பாளர்கள், பகுதிக்கழக நிர்வாகிகள், வட்டக்கழக  நிர்வாகிகள், செயல்வீரர்கள்,   கழகத்தோழர்கள், முன்னணியினர், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: