அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் வாய்க்கால் வழியாகவே தண்ணீரை கொண்டு வர கோரிஆர்ப்பாட்டம்

அன்னூர்,ஆக.22: அன்னூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் மாறுதல் செய்யாமல் வாய்க்கால் வழியாகவே தண்ணீரை கொண்டு வர வேண்டும், குழாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தை கைவிட வேண்டும் பணிகளை விரைவில் துவங்கி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழக அரசு தற்போது அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம் எனக்கூறி குழாய்கள் மூலமாக கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் அறிவித்துள்ளது.இதனால் அந்தந்த குட்டைகளுக்கு மட்டுமே தண்ணீர் செல்லும் நிலை உள்ளது.

Advertising
Advertising

இத்திட்டத்தால் வழியோர பகுதிகளில் இன்றளவும் பாதிப்புக்குள்ளான நீர் தட்டுப்பாடு தொடரும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புகளும் இல்லாமல் போகும். எனவே குழாய் மூலம் அமைக்காமல் கால்வாய் வழியாகவே அமைத்து அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அன்னூர் ஒன்றிய பகுதி முழுவதும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். சாலை,தெருவிளக்கு மற்றும்சுகாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிலுவை இன்றி ஊதியம் வழங்கவேண்டும். 100 நாட்களுக்கு பதிலாக இரண்டு நாட்களாக வேலை நாட்களை உயர்த்தி ஊதியத்தையும் உயர்த்தி தரவேண்டும்.அன்னூர் மருத்துவமனையை 100 படுக்கைகளுடன் தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

Related Stories: