காரிமங்கலத்தில் சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக மேற்கூரை

காரிமங்கலம், ஆக.20: காரிமங்கலம் விஏஓ அலுவலகத்தின் மேற்கூரை மழையால் சேதமடைந்து உள்ளதால் ஊழியர்கள், பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்ல ேவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரிமங்கலம் நகர கிராம நிர்வாக அலுவலகம், காரிமங்கலம் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள சிதிலமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு காரிமங்கலம், மிட்டஅள்ளி, வெள்ளையன்கொட்டாவூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர். இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டியது என்பதால், மிகவும் பழுதடைந்து, சுவர்கள் வலுவிழந்த நிலையில் உள்ளது.

அலுவலகத்தின் உள்ளே மேற்கூரை உடைந்து தொங்கிய நிலையில் உள்ளது. சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் கட்டிடம் இழுந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதனால், ஊழியர்களும், பொதுமக்களும் அச்சத்துடனே அலுவலகத்திற்கு வந்து செல்ல ேவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் நிகழும் முன்பாக, இந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: