ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஆக.20: தர்மபுரியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்று  ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ருத்ரையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில துணை தலைவர் ஆறுமுகம் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு, பெரிய கிராம ஊராட்சி மற்றும் ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது, அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த, பிடிஓ தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். அரசாணை 71ன் படி பிடிஓக்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட 22அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதில் சுருளிநாதன், சர்வோத்தமன், ராமஜெயம், சிவபிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: