ஸ்மார்ட் சிட்டி பணி ஆலோசனை

கோவை, ஆக.14:  கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் ஷரவண்குமார், துணை கமிஷனர் பிரசன்ன ராமசாமி, நகர பொறியாளர் லட்சுமணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் நிலவரம், குளத்தில் உள்ள நீரை சுத்திகரிப்பது, கரைகளை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மல்டி லெவல் கார் பார்க்கிங் பணி, ரோடு பணி குறித்து அதிகாரிகளின் கருத்து கேட்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடுத்துள்ள குளங்களை சீரமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: