வால்பாறையில் பொள்ளாச்சி எம்.பி., ஆய்வு

வால்பாறை, ஆக.11: வால்பாறை பகுதியில் மழை பாதித்த பகுதிகளை பொள்ளாச்சி எம்பி.,சண்முகசுந்தரம், கோவை திமுக. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

வால்பாறையில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை அதிக மழை பெய்து கடந்த மூன்று தினங்களாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். பாதிப்படைந்த 120 பேர் வால்பாறை அரசு கல்லூரியில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வால்பாறை டவுனில் பாதிப்படைந்த வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்து மக்களிடம் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தினர். அப் பகுதியில் உள்ள வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனை நேரில் ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து கோட்ட மேலாளர் ஜோதிமணிகண்டனிடம் கேட்டரிந்தார். மேலும் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார். படிப்படியாக பேருந்து சேவைகள் துவங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், டீசல் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Advertising
Advertising

முகாமிற்கு சென்று பாதிப்படைந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிப்படைந்த மக்களுக்கு ரூ.2000 ரூபாய் பணமும் அரிசியும் தமிழக அரசு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார். வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் வால்பாறை பகுதியில் நடந்த மழை சேதங்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.பழுதான சாலைகள் விரைவாக சரிசெய்யவேண்டும் எனவும், கூழாங்கல் ஆறு தூர்வாரப்பட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அரசு போக்கு வரத்து கழக பணிமனையின் பின்பகுதி தண்ணீர் போக இடையூறாக உள்ளதால் அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் மனு அளித்தனா். ஆய்விற்கு வந்த பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரத்திற்கு வால்பாறை திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, முன்னாள் நகராட்சி தலைவர் கோழிக்கடை கணேசன் மற்றும் நிர்வாகிகள் செந்தில், செல்வம், டென்சிங், மகுடீஸ்வரன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.

Related Stories: