போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் அவதி

வால்பாறை, ஆக.11: வால்பாறை பகுதியில் பெய்த கன மழை காரணமாக தொடர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிப்படைந்து உள்ளது. அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது. பணிமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் மின்வினியோகம் தடைபட்டுள்ளது. மேலும் பணிமனையின் பின் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பணிமனை பயன்பாட்டிற்கு வரவில்லை. பேருந்து அனைத்தும் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் வால்பாறை வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஆற்று நீர் வடிய துவங்கி உள்ளது. எனவே முகாமில் உள்ள மக்கள் படிப்படியாக வீடுகளுக்கு வரதுவங்கி உள்ளனர். இருப்பினும் இன்று ஞாயிறு கிழமையும் மழை நீடிக்கும் முகாம் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: