பள்ளி மாணவர்களுக்கு ஜல் சக்தி அபியான் திட்ட விளக்க கூட்டம்

காரிமங்கலம், ஜூலை 18: காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி நடுநிலையில், ஜல்சக்தி அபியான் பற்றிய திட்ட விளக்க கூட்டம் நடந்தது. காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி நடுநிலைப்பள்ளியில், ஜல்சக்தி அபியான் திட்ட விளக்க கூட்டம் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வேதவிநாயம் தலைமை வகித்தார். பிடிஓக்கள் வடிவேலன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பிடிஓ வடிவேலன் ேபசுகையில், ‘நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையால் குளம், கிணறு, ஏரி, ஓடை போன்ற நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், இத்திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. நீர் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பை ஊக்குவித்து, நிலத்தடி நீரை உயர்த்துவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.  இதன் முதல் கட்டம் செப்டம்பர் 15ம் தேதி வரையும், 2ம் கட்டம் அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரையும் செயல்படுத்தப்படும்,’ என்றார். கூட்டத்தில் ஆசிரியர்கள், ஊராட்சி செயலர்கள் பரந்தாமன், மகேந்திரன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: