அரூர் அருகே குப்பைக்கிடங்கில் எரிந்த நிலையில் ஆண் சடலம்

அரூர், ஜூலை 16: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே மாவேரிப்பட்டியில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் தினசரி சேகரமாகும் 5டன் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் மலை போல் குப்பை குவிந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில், குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீ பிடித்து எரிந்தது. இதை கண்ட துப்புரவு பணியாளர் முருகன், கோவிந்தன் ஆகியோர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க சென்றனர். அப்ேபாது அங்கு கை, கால்கள் எரிந்த நிலையில், ஆண் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, அரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜன், அரூர் டிஎஸ்பி செல்லப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த போது, சடலமாக கிடந்தவருக்கு சுமார் 50 வயதிருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், அரூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு ெசன்றனர். தீ காயங்களுடன் சடலமாக கிடந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா என்ற கோணத்தில், அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: